search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருளகோடு ஊராட்சியில் 45 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்
    X

    சுருளகோடு ஊராட்சியில் 45 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சுருள கோடு ஊராட்சிக்குட்பட்ட புனித அந்தோணியார் உயர்நி லைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 45 பயனாளி களுக்கு ரூ.9.92 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்த முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதர வற்றோர் விதவை சான்றி தழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.

    மேலும் குடும்ப அட்டை யின் வகை மாற்றுவதற்கான மனுக்கள் அதிகமாக வரு கிறது. மேலும் வீட்டுமனை பட்டா மனுக்களும் அதிகள வில் வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வீடு தொடர்பான மனுக்க ளுக்கு மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதி யான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம், முன்னோடி வங்கி ஆகிய துறைகள் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அம்முகாமில் 2200-கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர் களில் 250 நபர்களுக்கு உடனடி ஆணைகளும், 400-க்கும் மேற்பட்டவர் களுக்கு அடுத்த கட்டமாக தேர்வும் நடத்தப்படவுள்ளது. வருடத்திற்கு இரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், மாதந்தோறும் சிறு அளவி லான முகாம்களும் நடத்தப்படுவதோடு அரசு பணிக்க ளுக்கான பயிற்சி வகுப்பு களும் நடத்தப்பட்டு வரு கிறது.

    புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவி களுக்கு வங்கி மூ லமாக ரூ.1000 வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப் பித்து விடுப்பட்ட நபர்களுக்கு தகுதி அடிப்ப டையில் உதவித்தொகை வழங்குவ தற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. முதலில் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, விண்ணப்பங்களை பெற முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் தகுதியான பய னாளிகளை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு கண்டறியப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வேண்டும், இடி மின்னல் ஏற்படும்போது பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும், பொது இடங்களில் செல்லும் போது இடி மின்னல் தாக்கினால் மரத்தின் கீழோ, கட்டங்களின் கீழோ நிற்க வேண்டாம். மழைக்கா லத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மின்கம்பங்கள் அருகில் செல்லமாலும் அதன் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீர் அருகில் செல்ல மால் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் வீடுகளில் உபயோகிக்கும் மின்சாரம் மற்றும் பழுது அடைந்த மின்சாதனங்களை தொடமால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    விவாசாயிகள் உங்கள் பகுதியில் உள்ள காலநிலை களை அறிந்து அதற்கேற்ற பருவகாலங்களில் பயிரிட வேண்டிய பயிர்களை பயி ரிட்டு அதிக மகசூல் பெற்று தங்கள் வாழ்வதாரத்தை உயர்த்தி கொள்ள வேண் டும். மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் சுருள கோடு-உள்ளிமலை-மேதோப்பு-பூவஞ்சந்தி சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக, சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி வளாகத் தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கபட்டிருந்த பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ஜாண், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனக ராஜ், மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, துணை இயக்குநர்கள் வாணி (வேளாண்மை), ஷீலா ஜாண் (தோட்டக்கலை), திருவட்டார் வட்டாட்சியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா (சுருளகோடு), லில்லிபாய் (பாலமோர்), ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிலோமினாள் மற்றும் துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்

    Next Story
    ×