search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 சட்டமன்ற தொகுதியில் 1½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - மேயர் மகேஷ் பேச்சு
    X

    3 சட்டமன்ற தொகுதியில் 1½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - மேயர் மகேஷ் பேச்சு

    • ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
    • கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. தலைமை அலுவல கத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆலோச னைக் கூட்டம் நடைபெற் றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எப்.எம். ராஜரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாரும் மேயருமான மகேஷ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர் களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதன்படி, நாம் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங் குவதற்குள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நாம் வீடு வீடாக சென்று சந்தித்தாலே போதும், ஒரு வாரத்தில் பொறுப்பாளர் கள் அவர்கள் இலக்கை எட் டிவிட முடியும். இதுபோல் 100 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என்ற முறையில் பூத் கமிட்டி படிவங்களை பெற்று ஏப்ரல் 5-ந்தேதிக்குள் மாநில தலைமைக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதற்காக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு 16 பேரை டிக் செய்து, அதில் 8 பேரை தேர்வு செய்யலாம்.

    இதனை மேற்பார்வை செய்ய 3 பேர் குழுவை மாநில தலைமை அறிவித் துள்ளது. மேலும், யார் யார் என்கிற பட்டியலும் மாநில தலைமையே அறிவித்து பட் டியல் அனுப்பியுள்ளது. ஏப் ரல் 3-ந்தேதி நம் தலைவர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியதும், நாமும் சுறுசுறுப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும். ஜூன் 3-ந்தேதியிலிருந்து, கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் கலைஞரின் பெயரை உச்சரிக்க வேண்டும்.

    இதற்காக தலைவரின் உத்தரவுப்படி கட்அவுட் வைக்க கூடாது. அதற்கு பதிலாக துண்டு பிரசு ரங்கள், சுவர்விளம்பரங் கள் என மேற்கொள்ளலாம். மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டிமன்றம், நலத்திட்ட உத விகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம்கள், மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவுகள், கலை நிகழ்ச்சிகள், கலை போட்டிகள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசி னார். தொடர்ந்து, தொகுதி மேலிட பார்வையாளர்க ளான மாநில மகளிர் தொண்டரணி மாநில துணைசெயலாளர் விஜிலா சத்தியானந்த் (நாகர்கோ வில்), மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் அருண் (குளச்சல்), விளை யாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் நம்பி (கன்னியாகுமரி) ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட துணை செயலா ளர் பூதலிங்கம்பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, சதாசிவம், ஒன்றிய செய லாளர்கள் பிராங்கி ளின், மதியழகன், பாபு, சுரேந்திர குமார், லிவிங்ஸ்டன், மாந கர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜவ கர், ஷேக்மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×