என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.46½ லட்சத்தில் சாலைபணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது
நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி, பாரதி தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, ஏசுபக்தன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 32-வது வார்டுக்குட்பட்ட சைமன் நகர் 5-வது குறுக்கு தெருவில் ரூ.18.72 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, 23-வது வார்டுக்குட்பட்ட கே.பி. ரோடு, கிறாஸ் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது போன்ற பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிகி, சிஜி பிரவின், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் துரை, சேக் மீரான், இளைஞரணி சரவணன், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் மைக்கேல் ராஜ், சுரேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story






