என் மலர்
உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
- இரணியலில் 22 மி.மீ. மழை பதிவு
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரணியல் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தக்கலை, குளச்சல், கோழிபோர்விளை, ஆணைக்கிடங்கு, குருந்தன் கோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார், பூதப்பாண்டி, குழித்துறை பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தார மாக காணப்பட்டது. அவ் வப்போது மழை பெய்தது.
ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது. திற்பரப்பு அருவிப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் சாரல் மழை நீடித்தது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. தோவாளை சேனல், அனந்தனார் சேனல், புத்தனார் சேனல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.66 அடியாக இருந்தது.அணைக்கு 775 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.63 அடியாக உள்ளது. அணைக்கு 195 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி 1.6, களியல் 5.5, கன்னிமார் 1.4, குழித்துறை 7.8, நாகர்கோவில் 6.6, சுருளோடு 5, தக்கலை 13.2, குளச்சல் 18.4, இரணியல் 22, பாலமோர் 8.4, மாம்பழத் துறையாறு 17.2, திற்பரப்பு 5.4, கோழிப்போர்விளை 20.4, அடையாமடை 7.4, குருந்தன்கோடு 2.8, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 16.






