என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம்
    X

    ஜீவா சிலைக்கு கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்தார். அருகில் மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    இன்று பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம்

    • நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவ பிரபு, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் தலைமையில் அகமது உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×