என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதை படத்தில் காணலாம்
திருவட்டாரில் கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம்பார்சல் வேன் சாவியை பறித்து சென்றவர்களை தேடும் போலீசார்
- வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
கன்னியாகுமரி:
குலசேகரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பார்சல் வேன் புறப்பட்டுச் சென்றது. அதனை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
புலியிறங்கி பகுதியில் வேன் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹாரன் ஒலித்தபடி வழிவிட கேட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வேன் டிரைவர் வழி விடாமல் மெதுவாக சென்றதாக தெரிகிறது.
திருவட்டார் காங்கரை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், வேன் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி, தகராறு செய்துள்ளனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் வேனின் சாவியை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.
இதனால் டிரைவர் சுபாஷ் அதிர்ச்சி அடை ந்தார். வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதற்கிடையில் மோட்டார் சைக்கிள் ஆசாமி கள், அங்கு வந்து வேன் சாவியை தூக்கி எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். சம்பவம் குறித்து வேன் டிரைவர் சுபாஷ், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.
சாவியை பறித்துச்சென்ற நபர்கள் யார்? என்பது பற்றி அப்பகுதி சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.