search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது
    X

    நாகர்கோவில் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டார்களை படத்தில் காணலாம்.

    நாகர்கோவில் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது

    • கிறிஸ்துமஸ் விற்பனை களை கட்டியது
    • குடில்கள் கட்டும் பணி தீவிரம்

    நாகர்கோவில்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண் டாடப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா விமர்சை யாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கிறிஸ் துமஸ் விழாவை கொண்டாடு வதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரங்கள் ஜொலிக்கிறது.கண்ணை கவரும் வகையில் ஸ்டார்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ குடில்களும் கட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளிலும் ஸ்டார்கள் விற்பனை அமோக மாக நடந்து வருகிறது. பல்வேறு விதமான ஸ்டார்கள் விற்பனைக்காக கட்டப் பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க புத்தாடைகள் வாங்க கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் நாகர்கோவில் நக ருக்கு புத்தாடைகள் வாங்க குவிந்திருந்தனர். இதனால் நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அலைமோதியது. செம்மாங்குடி ரோட்டில் பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து கடைகளில் புத்தாடைகளை எடுத்துச் சென்றனர். இதனால் அந்த சாலையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மணிமேடை கலெக்டர் அலுவலகம் வடசேரி பகுதியில் உள்ள கடை களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை யையொட்டி பலவிதமான புத்தாடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை களை விரும்பி வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் விதவிதமான கேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தது. பொதுமக்கள் கேக்குகளையும் ஆர்வமாக வாங்கி சென்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, செட்டிகுளம், அண்ணா பஸ் நிலையம் பகுதி களில் வாகனங்கள் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதைடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், இரணியல், தக்கலை, குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கடை வீதிகளில் கூட்டம் அதிக மாக இருந்தது.

    Next Story
    ×