search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வாலிபர் கைது
    X

    கைதான எட்வின்

    பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வாலிபர் கைது

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    Next Story
    ×