search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே காவலாளி கொலை
    X

    கொலை செய்யப்பட்ட முருகன்

    சுசீந்திரம் அருகே காவலாளி கொலை

    • எனது மோட்டார் சைக்கிளை திருடியதால் தீர்த்து கட்டினேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேச புரம் என்.பி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தனியார் நிறுவன காவலாளி.

    இவர் கடந்த17-ந்தேதி சொத்தவிளை கடற்கரையில் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை கொலை செய்தது பீச் ரோட்டை சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குமரகுருவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த குமரகுரு தலைமறை வானார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 19-ந் தேதி குமரகுரு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 23-ந்தேதி நாகர்கோவில் ஜெயிலுக்கு குமரகுரு கொண்டு வரப்பட்டார். குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த குமரகுருவிற்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கினார். குமரகுருவை போலீசார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது குமரகுரு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் முருகனும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போனது. அந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் முருகன் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது எனது மோட்டார் சைக்கிளை தருவதாக அவர் கூறினார். இதையடுத்து நான் அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் எனக்கு மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டார்.நான் என்னிடம் பணம் இல்லை. பீச் ரோட்டில் உள்ள வீட்டில் சென்று எடுத்து தருவதாக கூறினேன். உடனே முருகனும் நானும் பீச் ரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்றோம். அங்கு பணத்தை எடுத்து விட்டு கத்தி ஒன்றை எடுத்து வந்தேன்.

    இந்த நிலையில் மது அருந்திய போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் எனது மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டபோது முருகன் சரியாக பதில் கூற வில்லை. இந்த நிலையில் மாலையில் இருவரும் மது வாங்கிவிட்டு சொத்தவிளை கடற்கரைக்கு சென்றோம்.அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது மோட்டார் சைக்கிளைப் பற்றி கேட்டதற்கு எனக்கு மோட்டார் சைக்கிளை பற்றி ஒன்றும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக கத்தி யால் குத்தினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட் டேன். இவ்வாறு அவர் கூறி னார்.

    கைது செய்யப்பட்ட குமரகுரு மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குமரகுருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். கொலை நடந்த சொத்தவிளை கடற்கரைக்கு சென்று விசாரணை நடத்த வும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×