search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரையாண்டு விடுமுறை முடிந்து  பள்ளிகள் இன்று திறப்பு
    X

    கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு உற்சாகத்துடன் செல்லும் மாணவிகளை படத்தில் காணலாம். 

    அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 5-ந் தேதி தொடக்கம்
    • தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது. பின்னர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி இன்று (2-ந்தேதி) முதல் 4 -ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ந்தேதி திறக்கப்படும். மேலும் இந்த நாட்களில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இடம்பெறாதவர்கள் பள்ளிகளில் உள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான விடுமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இன்று (2-ந்தேதி) அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    Next Story
    ×