search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்
    X

    பொது மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கிய காட்சி.

    நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்

    • பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை
    • இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

    அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. பின்னர் மனுவானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் மனு வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து நேரில் மனு வாங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று இந்த கூட்டம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை வழங்கலாம். மேலும் போலீஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்திகரமானதாக இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×