search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரியில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

    • போலீசார் கடும் கட்டுப்பாடு
    • குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

    ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×