என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா
  X

  கோப்பு படம் 

  கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவடி பூஜையுடன் 25-ந் தேதி தொடங்குகிறது
  • பாதையாத்திரை அஞ்சு கிராமம், கூடங்குளம், திசையன்விளை, தட்டார் மடம், உடன்குடி வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி மறக்குடி தெருவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் மாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக் கான மாசிப் பெருந் திருவிழா வருகிற 25-ந்தேதி காவடி பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு காவடி பூஜையில் வைக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

  2-ம் திருவிழாவான 26-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு நையாண்டி மேளக்கச்சேரி நடக்கிறது. 3-ம் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம்1 மணிக்கு அன்ன தானம், மாலை 6 மணிக்கு பலவண்ண மலர்களால்அலங்கரிக்கப் பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வல மாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

  4-ம் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப் பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த பாதையாத்திரை அஞ்சு கிராமம், கூட்டப்புளி, கூடங்குளம், நவ்வலடி, திசையன்விளை, தட்டார் மடம், மணிநகர், உடன்குடி, தருவைகுளம் வழியாக அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை திருச்செந்தூர் சென்றடைகிறது. அன்று காலை திருச்செந்தூரில் சுப்பிரமணிய சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் 4-ந்தேதி பச்சை சாத்து நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் காவடியுடன் கன்னியாகுமரி நோக்கி பாதயாத்திரையாக புறப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் அதே வழியாக 6-ந்தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேர்கிறார்கள்.

  கன்னியாகுமரி நகர எல்லை பகுதியான விவேகானந்த புரம் சக்ர தீர்த்த குளம் அருகில் காவடிக்கு வரவேற்ப ளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சுப்பிரமணியசாமி கோவி லில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜை விழா, 8 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

  விழாவுக்கான ஏற்பாடு களை கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாக குழு தலைவர் இ.பாலு தேவர், செயலாளர் ஏ.சண்முகசுந்தரம், பொரு ளாளர் பி.பரமார்த்தலிங்கம், துணைத் தலைவர் நடராஜன், துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

  Next Story
  ×