என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குமரியில் சேவை குறைபாடு காரணமாக இன்சூரன்சு நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- இன்சூரன்சு நிறு வனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜேஸ். இவர் ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்திடம் 'ஹெல்த் இன்சூரன்சு பாலிசி' எடுத்திருந்தார்.
அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்க ப்பட்ட அருள் ராஜேஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார். சிகிச்சைக்காக ரூ. 24,450 செலுத்திய அவர், இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் கேட்டார். ஆனால் இன்சூரன்சு நிறு வனம் சரியான காரண ங்களை கூறாமல் சிகிச்சை க்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் ராஜேஸ் வழக்க றிஞர் மூலம் இன்சூரன்சு நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சை க்காக ஏற்கனவே செலவ ழித்த ரூ. 24 ஆயிரத்து 785, நஷ்ட ஈடாக ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.59ஆயிரத்து 755-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.






