search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கிள்ளியூர்-தோவாளையில் தொழில் ஊக்குவிப்பு முகாம்கள்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் கிள்ளியூர்-தோவாளையில் தொழில் ஊக்குவிப்பு முகாம்கள்

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கூடுதல் விவரங்களுக்கு 04652-260008 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றும் பொருட்டு தொழில்களுக்கு தோள் கொடுத்து தொழில் வளம் பெருக்க புதிய தொழில்முனைவோர்களை கண்டறியும் பொருட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம் 15-ந் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும், 22-ந் தேதி தோவாளை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு செயல்ப டுத்தி வரும் வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ( UYEGP ) நமது மாவட்டத்திற்கு 98 நபர்களுக்கு ரூ.78 லட்சம் மானிய திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பலசரக்கு வியாபாரம், மின்சார பொருட்கள் வியா பாரம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து வகை யான வியாபாரங்களுக்கும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது . ரூ.5 லட்சம் வரையுள்ள திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு ரூ .385 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும்.

    இத்திட்டத்தில் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மத்திய அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 189 நபர்களுக்கு ரூ.546 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் சிறப்பு பிரிவினர் தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சம் 35 சதவிகிதம் மானியம் பெற வழிவகை

    உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற www.kviconline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மேற்படி கடன் திட்டங்க ளுக்கு விண்ணப்பிக்க கடவுசீட்டு அளவு நிழற்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , விலைப்புள்ளி, கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் மேற்படி அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ப வர்களுக்கு கூட்ட அரங்கி லேயே விண்ணப்பம் பதிவேற்றம் செய்து வழங்கப்படும் .

    மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் , தொழிற்பேட்டை கோணம் அஞ்சல் , நாகர்கோவில் -4 அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×