search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் நடந்த வருமான வரி சோதனை
    X

    சிதறால் வெள்ளாங் கோட்டில் உள்ள தொழில் அதிபர் ராஜேந்திரன் வீடு.

    குமரியில் நடந்த வருமான வரி சோதனை

    • தொழில் அதிபர் வீடு-அலுவலகங்களில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கின
    • ஆடிட்டரின் வீடு- அலுவலகம் சோதனை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. குறிப்பாக திரு வட்டாறை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்த ராஜே ந்திரன் என்பவரது வீடு, திருமண மண்டபம், செங்கல் சூளை போன்றவற்றில் ஓரே நேரத்தில் சோதனை நடத்த ப்பட்டது.

    தொழில்அதிபர் ராஜேந் திரனுக்கு, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உள்ளன. மேலும் இவர் குமார கோவில் முருகன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறார்.

    இவருக்குச் சொந்தமான லாரிகள் மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்.சாண்ட், என்.சாண்ட்போன்றவை திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சூழலில் தான் வருமான வரித்துறையினர் ராஜேந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட் டனர். மேலும் அவ ருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகள் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அவரது விடுதி ஆகிய வற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவண ங்களை வருமான வரித்துறை யினர் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அவற்றை தங்கள் அலுவலகம் கொண்டு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜேந்திரனின் ஆடிட்ட ரின் வீடு மற்றும் அலுவலகம் கழுவன் திட்டை பகுதியில் உள்ளது. அங்கும் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். இதில் சொத்து மற்றும் பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×