என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தபோது எடுத்த படம்
தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல்

- இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
- முன்னதாக விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான விஜயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக நடந்த விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணைச் செயலா ளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், பிராங்க்ளின், மதியழ கன், லிவிங்ஸ்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ. என். சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.