search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×