search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
    X

    கோப்பு படம் 

    செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • வாங்கிய 5 மாதங்களில் செல்போன் பழுது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குஞ்சன் விளையை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டிலுள்ள செல்போன் கடையில் ரூ.15,490 மதிப் புள்ள செல்போன் ஒன்று வாங்கினார். ஆனால் வாங்கிய 5 மாதங்களிலேயே செல்போன் பழுது ஏற் பட்டது.

    இதைத் தொடர்ந்து கடைக்காரரிடம் செல் போனை கொடுத்து சரி செய்து தருமாறு சுரேந்திரன் கூறினார். அப்போது ரூ.4,167 செலுத்தினால் பழுது பார்த்து கொடுப்பதாக கடைக்காரர் தெரிவித்தார்.ஆனால் வாரண்டி காலம் முடிவடையாததால் ஏன் பணம் கேட்கிறீர்கள் என்று சுரேந்திரன் கேட்டுள்ளார். எனினும் கடைக்காரர் பணம் கேட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேந்திரன் இதுதொடர்பாக வக்கீல் மூலம் நோட்டிஸ் அனுப்பினார். அதன் பின்ன ரும் உரிய பதில் கிடைக்கா ததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் சுரேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் புதிய செல்போன் அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.15,490 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×