என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குளச்சல் பகுதியில் 5 நாட்கள் மின்தடை
- இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்
- உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி:
இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செம்பொன்விளை துணை மின் நிலையம் குளச்சல் விநியோக பிரிவுக்குட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் வரும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடப்பதால் உடையார்விளை, கோணங்காடு, அஞ்சாலி ஆகிய பகுதியிலும், 15-ந்தேதி செம்பொன்விளை மின் பிரிவுக்குட்பட்ட பாலப்பள்ளம், மிடாலக்காடு, நீர்வக்குழி, மத்திக்கோடு, பிடாகை, சகாய நகர், குப்பியந்தறை, நெடுவிளை பகுதியிலும், 16-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட நரிக்கல், கீழ்கரை பகுதியிலும், 21-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட இலப்பைவிளை, மரமடி, கொட்டில்பாடு, குழந்தை ஏசு காலனி, ஆசாத்நகர், காரித்தாஸ் காலனி பகுதியிலும், 22 ம் தேதி செம்பொன்விளை விநியோகத்திற்குட்பட்ட இரும்பிலி, கணேசபுரம், பனவிளை, சலேட்நகர், கண்டர்விளாகம், வாணியக்குடி, ஆலஞ்சி, குறும்பனை ஆகிய பகுதியிலும் மேற்கூறிய நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






