என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்-மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
தக்கலை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்
- சமூக வலைதளத்தில் வைரலான விபத்து காட்சிகளால் பரபரப்பு
- படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை அழகியமண்ட பம் அருகே சம்பவத்தன்று ஒரு கார் வேகமாக சென்றது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் சென்ற கார் சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.மேலும் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ வையும் இடித்து சேதப்படு த்தியது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் கட்டுப் பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தது கருங்கல் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் என்பதும் அவர் தனது பெண் நண்பருடன் வந்த போது தான் விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த பிலாங்காலை சேர்ந்த சோனி (வயது43) படுகாய மடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் சேத மடைந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் இரவி புதூர் கடை பகுதியை சேர்ந்த எட்வின் வசந்த் என்பவரும் காயம் அடைந்தார்.






