என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பூர் அருகே சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலி- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    X

    கடம்பூர் அருகே சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலி- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    • வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
    • வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் இரவு கடம்பூர் அருகே கே.என்.பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக அந்த புலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றது. புலி நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பொதுவாக இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது புலி நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,

    தற்போது வனப்பகுதியில் மழை பெய்து மரம் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால்வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. தற்போது கடம்பூர் அடுத்த கே.என் பாளையம் செல்லும் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×