என் மலர்
காஞ்சிபுரம்
6-வது செயின்ட் ஜோசப்ஸ் சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் நடக்கிறது.
6-வது செயின்ட் ஜோசப்ஸ் சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் தொழில் நுட்ப கல்லூரியில் நடக்கிறது.
கிருஷ்ணா, ரவிசண்முகம், சக்கரவர்த்தி ரெட்டி, ராமநாதன் போன்ற சர்வதேச மாஸ்டர்கள் இதில் பங்கேற்கிறார். 512 வீரர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 லட்சம் ஆகும்.
பல்லாவரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம், கண்ணபிரான் தெருவை சேர்ந்த 5வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் எரோன் மோசஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தாம்பரம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து எரோன் மோசசை கைது செய்தனர்.

சிட்லபாக்கத்தில் சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த சிட்லபாக்கம் லெனின் தெருவில் சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. அந்த பச்சிளம் குழந்தையின் உடலை சில நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ துணியில் கட்டி சாலை ஓரம் வீசி சென்று உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.
குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியதோடு, குழந்தையின் வலது காலை கடித்து எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது.
குழந்தை யாருடையது? குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் குழந்தையை வீசி சென்றவர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.
ஆலந்தூர்:

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்களும், 2 அரேபிய மீனவர்களும் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி துபாயில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒரு அரேபிய மீனவர் கடலில் தவறி விழுந்து விட்டார்.
இவர்களை துபாய் அரசு ஒரு மாத நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் விடுவித்தது. ஆனால் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சாட்சிகள் என்ற பெயரில் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையின் பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை மீட்க முயற்சி செய்தனர். இதையடுத்து 23 மீனவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், சசிகுமார், பிரகாசம், சிலுவை, ஜோசப், அந்தோணி, அபிஷேக், ஜான்சன், தூத்துக்குடியை சேர்ந்த ராய்ஸ்டன், அரசு, ஜெரன் ஆகிய 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தனர். துபாயில் உள்ள மற்ற மீனவர்கள் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரில் வசித்து வருபவர் சாந்தி. இவரது மகள் பிரியங்கா (20). மணிமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை சாந்தியின் வீட்டுக்கு 4 பேர் கும்பல் காரில் வந்தனர். அவர்கள் சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மாணவி பிரியங்காவை காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவியை சிங்க பெருமாள் கோவில் அருகே செட்டிபுண்ணியத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று பிரியங்காவை மீட்டனர். அங்கிருந்த கடத்தல்காரர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் படப்பையை சேர்ந்த சேகர், வாலாஜாபாத்தை சேர்ந்த ஞானமூர்த்தி, தண்டபாணி, ராஜ் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
கடத்தப்பட்ட மாணவி பிரியங்காவும், அவரது தாய் சாந்தியும் கடந்த மாதம் வரை மதுரவாயலில் வசித்து வந்துள்ளனர். அங்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் சாந்தி பணம் வாங்கி இருந்தார். ஆனால் அவர் வீடு வாங்கி கொடுக்கவில்லை.
இதுதொடர்பான மோசடி புகாரில் ஏற்கனவே சாந்தியை போலீசார் கைது செய்து உள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் குடும்பத்துடன் ஊரப்பாக்கத்துக்கு இடம் மாறி வந்துள்ளார்.
இதனை அறிந்த பணம் கொடுத்து ஏமாந்த சேகர் உள்பட 4 பேரும் சாந்தியை மிரட்டி பணம் கேட்பதற்காக அவரது மகள் பிரியங்காவை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கடத்தப்பட்ட 5 மணி நேரத்துக்குள் மாணவி மீட்கப்பட்டுள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

வண்டலூர் பூங்காவில் ‘குளுக்கோமா’ நோயால் பார்வை இழந்த தென் அமெரிக்க சிறுத்தையின் வலது கண் அகற்றப்பட்டது.
வண்டலூர்:
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘ரிக்கி’ என்ற 15 வயது தென் அமெரிக்க ஆண் சிறுத்தை ஒன்று உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த சிறுத்தை ‘குளுக்கோமா’ என்ற கண் நீர் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டதால் படிப்படியாக பார்வை இழந்தது.
கண்ணில் ஏற்படும் வலியின் மூலம் மனிதர்களால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் வனவிலங்குகளுக்கு நோய் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியவருவதால், உரிய முன் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
கண் நீர் அழுத்த நோயால் பார்வை இழந்த சிறுத்தை ரிக்கிக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. அதன்படி சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியம் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் அந்த சிறுத்தையை நேரடியாக பார்வையிட்டனர்.
குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் முற்றிவிட்டதால், கண்பார்வை முழுமையாக இழந்த நிலையில், கண் வீக்கத்தினால் ஏற்படும் கடும் வலியை குறைக்கும் பொருட்டு சிறுத்தையின் இரண்டு கண்களையும் அகற்ற நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதன் அடிப்படையில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மத் சபியுஸ்மா தலைமையில் பூங்கா விலங்கு மருத்துவர்கள் அடங்கிய அறுவை சிகிச்சை குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆண் சிறுத்தையின் வலது கண் முழுமையாக அகற்றப்பட்டு, அதை மூடி தையல் போடப்பட்டது. அந்த கண்ணில் இருந்து 12 மில்லி லிட்டர் நீர் அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் அந்த சிறுத்தை, பூங்கா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளும், வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் முழுமையாக குணம் அடைந்தவுடன், உரிய பரிசீலனைக்கு பிறகு அந்த சிறுத்தையின் மற்றொரு கண்ணும் ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட உள்ளது.
தென்அமெரிக்க சிறுத்தைகள் காட்டில் சுமார் 15 வருடங்கள் வரை உயிர் வாழும். அடைப்பிடத்தில் 20 வருடங்கள் வரை வாழும். இந்த அறுவை சிகிச்சை மூலம் வாழ்வின் இறுதிப்பகுதியை அமைதியுடன், வலி இன்றி கழிக்க அந்த சிறுத்தைக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
பார்வை குறைபாடு ஏற்பட்ட ஆரம்ப நிலையில் இருந்து அதற்கு தகுந்தவாறு வாழ பழகிக்கொண்டதால் பார்வை இழந்த கண்களை அகற்றுவதால் அந்த சிறுத்தையின் அன்றாட நடவடிக்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த முடியாது என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஞ்சா சாக்லெட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. வருங்கால சமுதாயமே இதனால் பாதிக்கப்படும்.
கஞ்சா சாக்லெட்டை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா சாக்லெட் விற்பனை செய்பவர்களை ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வழக்கு தொடர வேணடும்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தடுக்கவும் அவரது அமெரிக்க பயணம் நல்ல ஒரு தீர்வாக அமையும்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர் சங்கங்களை அழைத்து மத்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு, வடக்கு மாகாண அரசு ஆகிய தரப்பினர் ஒன்று கூடி பேச்சு நடத்த வேண்டும். அப்போது தான் தீர்வு ஏற்படும்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்கள் சங்க பிரதிநிதிகளையும் டெல்லி அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறேன். அதற்கு அனைத்து மீனவர் சங்கங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்பது ஒன்றே வழி என்பது சரியானதல்ல. 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இத்தனை காலம் அமைதியாக இருந்து விட்டு இப்போது மீட்க வேண்டும் என்பது தவறானது.
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் கொள்கை. மாநில அரசுதான் அதை அமுல்படுத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வாய்ப்பில்லை. ஏனென்றால் குளிர் பிரதேச பகுதிகளில் மதுவிலக்கை அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை. வெப்பமான பகுதிகளில்தான் மது விலக்கை அமுல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.ஆலந்தூர்:

இவ்வாறு அவர் கூறினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை சதுப்பு நில மான், முதன் முறையாக குட்டி ஈன்றது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை சதுப்பு நில மான் ஒன்று கடந்த 25-ந்தேதி ஒரு ஆண் குட்டியை ஈன்று உள்ளது. சதுப்பு நில மான், இந்த பூங்கா தொடங்கப்பட்டதில் இருந்து குட்டி போடுவது இதுவே முதன்முறையாகும்.
புதிதாக பிறந்த அந்த மான் குட்டியுடன் சேர்த்து வண்டலூர் பூங்காவில் உள்ள சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 ஆண் மான்கள், 8 பெண் மான்கள் அடங்கும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இமயமலை அடிவாரம் முதல் தெற்கே கோதாவரி ஆறு வரையும், கிழக்கே சுந்தரவன காடுகள் முதல் மேற்கே சிந்து நதி வரையும் சதுப்பு நில மான்கள் காணப்பட்டன. தற்போது மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
மேற்கு வங்காளம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்ட இந்த உயிரினம் தற்போது அழிந்து விட்டது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இந்த உயிரினம் அழிந்துவிட்டது.
கொம்பு உதிரும் மான் வகையைச் சேர்ந்த இவை, கொம்பில் மூன்றுக்கும் அதிகமான கிளைகளை உடையதால் மற்ற இந்திய மான்களில் இருந்து சிறப்புடையதாக விளங்குகிறது. கொம்பில் 12 கிளைகள் இருப்பதால் பாராசிங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
அரிய வகையான இந்த வகை மான்கள் சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழ்கின்றன. நீருக்கு அடியில் வளரும் புல் வகைகளை மேயும் இயல்பை உடையது. பெண் 2 முதல் 3 வயதிலும், ஆண் 4 வயதிலும் பருவ வயதை எட்டும். சினைக்காலம் 240 முதல் 250 நாட்களாகும். ஒரு குட்டியை மட்டுமே ஈனும். அடைப்பிடங்களில் 23 வருடங்கள் வரை வாழும்.
சதுப்பு நிலங்கள் அழிப்பு, ஆறுகள் அழிப்பு, சதுப்பு நிலங்களில் வண்டல் மண் படிதல், வாழ்விடங்களில் மேய முடியாத அன்னிய தாவரங் கள் ஆக்கிரமிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் இந்த மான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 அட்டவணை 1-ன்படி சதுப்பு நில மான்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.
இவ்வாறு பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.