என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, இந்திரா நகர் கனக தூர்க்கை அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவநேசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்.

    இவரது மனைவி கலைவாணி. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகள் குரோம்பேட்டையில் டாக்டராக உள்ளார். அவரை பார்ப்பதற்காக சிவநேசன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்றார்.

    நேற்று மாலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. லாக்கரும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை காணவில்லை. மர்ம கும்பல் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    சிவநேசன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். லாக்கர் அங்கேயே அதன் சாவியும் இருந்துள்ளது. எனவே கொள்ளை கும்பல் எளிதாக நகையை சுருட்டி சென்றுவிட்டனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பீர்க்கன்கரணையில் மொபட்டில் வாலிபருடன் வந்து இளம்பெண் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பீர்க்கன்கரணை ஏ.எஸ்.ராஜன் நகரில் வசித்து வருபவர் தங்கபாண்டி. இவரது மனைவி முத்து வடிவு. நேற்று மாலை முத்துவடிவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது பின்னால் இளம்பெண் மொபட்டை ஓட்டி வந்தார். அவருடன் வாலிபர் ஒருவரும் இருந்தார்.

    முத்துவடிவு அருகே மொபட்டை இளம்பெண் ஓட்டினார். அப்போது இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் திடீரென முத்துவடிவு கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்தான்

    பின்னர் இருவரும் மொபட்டில் தப்பிச் சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த முத்துவடிவு கூச்சலிட்டார். நகை பறிப்பில் வாலிபருடன் இளம்பெண்ணும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பீர்க்கன் கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் படப்பை ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகவும், ஊராட்சி தி.மு.க. இளை ஞர் அணி செயலாளராகவும் இருந்தார்.

    நேற்று காலை அவர் அதே பகுதி டேவிட் நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி தேவாலய வளாகத்திலேயே வெட்டிக் கொன்றனர்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட தனசேகரன் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து சவுடு மண் குவாரி எடுத்து நடத்தி வந்தார். இதில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையே தனசேகரனின் உறவினர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் தனசேகரன் போட்டியிட முடிவு செய்து இருந்தார்.

    இதிலும் சிலருடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கொலை நடந்ததா? என்று உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.

    கொலையில் ஈடுபட்டது கூலிப்படையினர் என்று தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரில் வசித்து வந்தவர் தனா என்கிற தனசேகரன் (வயது 31). படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் இருந்தார்.

    இவரது மனைவி டெல்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தனசேகரன் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் அதே பகுதி டேவிட் நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை தனசேகரனின் மனைவி மற்றும் 2 மகன்களும் முன்கூட்டியே தேவாலயத்துக்கு சென்று விட்டனர். பின்னர் தனசேகரன் மட்டும் தனியாக மோட்டார் சைக்கிளில் தேவாலயத்துக்கு சென்றார்.

    தேவாலயம் முன்பு அவரது நண்பர் ஒருவர் நின்றார். அவரிடம் தனசேகரன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தனசேகரனை மட்டும் சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கொலைக் கும்பலிடம் இருந்து தப்பிக்க தேவாலயத்துக்குள் ஓடினார். விரட்டிச் சென்ற கும்பல் தனசேகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    தலை, கழுத்து, முதுகில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில்கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் தனசேகரன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு தேவாலயத்துக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அலறல் சத்தம் கேட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

    அப்போது பொது மக்கள் சிலர் கொலை கும்பலை பிடிக்க முயன்றார். உடனே மர்ம கும்பல் அரிவாளை காட்டி மிரட்டினர். யாராவது பிடிக்க முயன்றால் வெட்டி கொன்று விடுவதாக தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து கொலை கும்பல் சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தனசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையுண்ட தனசேகரன் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் சவுடு மண் குவாரி எடுத்தும் தொழில் செய்தார்.

    இதில் சிலருடன் அவருக்கு மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே தொழில் போட்டியில் தனசேகரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அவர் வெற்றி பெற்ற 6-வது வார்டில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருந்தார். நாளை தனசேகரன் வேட்பு மனுதாக்கல் செய்ய இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    கொலையாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    தனசேகரன் கொலை செய்யப்பட்ட போது, அவரது மனைவி டெல்சி 2 மகன்களுடன் அருகில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் வழிபாட்டில் இருந்தார். கணவர் கொலை செய்யப்பட்டது அறிந்ததும் அவர் குழந்தைகளுடன் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    பட்டப்பகலில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் படப்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    அப்போது அவர் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் அறைகளின் பாதுகாப்பு, வாக்கு சீட்டுகள் பிரித்து எண்ணுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை கூடங்களை பார்வையிட்டார்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசணை மேற் கொண்டார். மேலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகளை பிரித்தெடுக்கும் பணிக்கு ஆகும் நேரத்தினை கணக்கில் கொண்டு பணியினை விரைவாக முடிக்க ஏற்றவகையில் வாக்கு எண்ணிக்கை கூடத்தினை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ் செல்வி, வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, நகராட்சி கமிஷ்னர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி துணைத் தலைவரின் வீட்டில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் சசிகுமார் (40). தண்டலம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    நேற்று இவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் சென்று வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். குண்டு வீட்டின் சுவற்றில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி மீண்டும் சசிக்குமாரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியதில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலீஸ் காவலுக்கு இருந்தும் தைரியமாக நாட்டு வெடிகுண்டு வீசிய தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்பட்டது.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வழக்கமாக அக்டோபர் 2-வது வாரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்படும். ஏப்ரல் மாதம் வரை இது திறந்து இருக்கும்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் உத்திரமேரூர், கிளியாற்று ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரி பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் வேடந்தாங்கல் சரணாலய பகுதி பறவைகள் தங்கும் சீதோ‌ஷண நிலைக்கு மாறியது. இதையடுத்து இலங்கை பர்மா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பறவைகள் முன்கூட்டியே அங்கு வரத்தொடங்கின.

    இதில் நத்தை கொத்தி நாரை, சாம்பல் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா, நீர்காகம், பாம்பு தாரா, மிளிர்உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை பறவைகள் முக்கிய மானவை. அவைமரத்தின் உச்சியில்அமர்ந்து இருப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயத்தை முன்கூட்டியே திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சென்னை வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலி, வேடந்தாங்கல் சரணாலயத்தை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்க உத்தரவிட்டார்.

    பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புகைப்பட காமிராவுக்கு ரூ25, வீடியோ காமிராவுக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை சரணாலயம் திறந்து இருக்கும்.

    முதல் நாளிலேயே ஏராளமானோர் சரணாலயத்திற்கு வந்து பறவைகளை ரசித்து சென்றனர்.

    தொடர்ந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளன. தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    திருப்போரூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. ஆலத்தூரை சேர்ந்த முருகன் (வயது 34). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தபோது திடீரென பாய்லர் வெடித்தது. இதில் முருகன், மேலாளர்கள் அருள் கிருஷ்ண பிரசாத், சதீஷ், ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    அவர்களை மற்ற ஊழியர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே முருகனின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆலுத்தூரில் உள்ள சிப்காட் வளாக வாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அது வரை முருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசாரும், தொழிற்காலை நிர்வாகத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
    உள்ளாட்சி தேர்தலுக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1971 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6075 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு கடந்த 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

    மாவட்டத்தில் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்கள் பதவிக்கு 35 பேரும், 252 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும், 633 ஊராட்சி தலைவர் பதவிக்கு 229 பேரும், 4617 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1640 பேரும் 264 நகரமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு 6 பேரும், 282 பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் என இதுவரை 1971 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று அமாவாசை தினம் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்ரீபெரும்புதூரில் தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் குண்டுவீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வருபவர் சசிகுமார். தே.மு.தி.க. ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இன்று அவரது வீடு மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் உடனே தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பீகார் மாநிலத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதையடுத்து சொந்த ஊருக்கு அழைத்து வர ஜெயசீலன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த திங்கட்கிழமை பீகாருக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஜெயசீலன் வீட்டு பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் லேப்டாப் ஆகியவற்றை எடுத்து கொண்டு பீரோவை உடைக்க முயன்றனர்.

    அந்த நேரத்தில் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலியை கேட்ட கொள்ளை கும்பல் டி.வி.யை மட்டும் எடுத்து கொண்டு பின்பக்கம் வழியாக நைசாக தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் ஜெயசீலன் வீட்டில் சோதனை செய்த போது டி.வி. மட்டும் திருட்டு போய் இருந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. ரோந்து போலீசாரை கண்டதும் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்ததால் நகைகள் தப்பியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உத்திரமேரூர் பஜாரில் சரவணா பாத்திரக்கடை, விமலா ஜூவல்லர்ஸ், பாலாஜி டைல்ஸ், பாரஸ் ஜூவல்லரி மற்றும் 2 கடைகள் உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூர் பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன.

    நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சரவணா பாத்திரக்கடை, விமலா ஜூவல்லர்ஸ், பாலாஜி டைல்ஸ், பாரஸ் ஜூவல்லரி மற்றும் 2 கடைகள் உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    சென்னை, காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தம் 20 பேர் தனித்தனி குழுவாக 6 கடைகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அவர்கள் கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    ஒரே நேரத்தில் 6 கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சோதனை நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×