என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கச்சபேஸ்வரர் கோவில் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பொது மக்கள், வியாபாரிகள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, ‘ஜல்லிக் கட்டு என்பது மிருக வதை அல்ல. உழவுத் தொழிலுக்கு பயன்படும் மாடுகளை போற்றி பாதுகாக்கும் தமிழர்கள் அவற்றினை துன்புறுத்துவதாக கூறுவது தவறு. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டின் அடையாளம்.
ஜல்லிக்கட்டை மிருக வதை சட்டத்தில் இருந்து நீக்கி தமிழகத்தின் பண்பாட்டையும் வீரத்தையும் காக்கும் வகையில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களின் மீதான மறைமுக தாக்குதலை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய- மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நிர்வாகிகள் பொன்மொழி, சிவிஎம். சேகர், பி.எம்.குமார், வி.ராஜேந்திரன், சிறுவேடல் செல்வம், வி.எஸ்.ராமகிருஷ்ணன், அபுசாலி, குமணன், பாண்டியன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், நிர்வாகிகள் படப்பை மனோககரன், மேடவாக்கம் ரவி, காமராஜ், ஆதிமாறன், செல்வக்குமார், ஜோசப், ஜெயக்குமார், பெருங்களத்தூர் சேகர், லோகநாதன், புகழேந்தி, எம்.கே.தண்டபாணி, துரைசாமி, விசுவநாதன், ரஞ்சன், பம்மல் வே.கருணாநிதி, தாம்பரம் காமராஜ் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சி கொடியை ஏற்றி மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் பரந்தாமன், காயத்ரி ஸ்ரீதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காளை மாடுடன் வந்து இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை அவர்கள் வைத்து இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 72 முறை கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.
இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடனே விமான நிலையத்திற்குள் செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 73-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் தானியங்கி கண்ணாடி கதவு திடீரென்று உடைந்து விழுந்தது.
சத்தம் கேட்டு பயணிகள், நர்சுகள் அலறியடித்து ஓடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. பயணி ஒருவர் டிராலியை தள்ளும் போது கண்ணாடி கதவில் இடித்ததால் உடைந்து விழுந்துள்ளது.
இது தொடர்பாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.
பல்லாவரம் அப்துல் பரூக் தெருவில் வசித்து வருபவர் ஜான் மார்ட்டீன். இவரது மகள் ஆலீன் (9). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றாள். வகுப்பறையில் இருந்த ஆலீன் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவளிடம் மற்ற மாணவிகள் விசாரித்த போது எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது திடீரென ஆலீன் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவளை மீட்டு பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆலீன் பரிதாபமாக இறந்தார். இறந்து போன ஆலீனுக்கு இருதய நோய் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வார்தா புயல் சென்னை நகரை தாக்கி சூறையாடியது. மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பலத்த சேதம் அடைந்தது. பூங்காவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. பூங்கா முழுவதும் மரக்கழிவுகள் சிதறி கிடந்தன. விலங்குகளின் இருப்பிடங்களும் பாதிப்பு அடைந்தன. பார்வையாளர்கள் சுற்றி பார்க்க வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்களும் சேதம் அடைந்தன.
புயலால் பாதிப்படைந்த பூங்காவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு மரங்களை உடனே அகற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து விலங்குகளை பாதுகாப்பாக அடைத்து விட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
முதலில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பாதையில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன. சேதம் அடைந்த விலங்குகளின் இருப்பிடங்கள் சரி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சரிந்த அனைத்து மரங்களையும் அகற்றுவதில்தான் தாமதம் ஆனது.
எந்திரம் மூலம் மரங்களை துண்டு துண்டாக வெட்டி அகற்றி ஒரே இடத்தில் குவித்து வைத்துள்ளனர். மேலும் மரக்கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையின்போது வண்டலூர் பூங்காவில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சுமார் 1½ லட்சம் பேர் வரை வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே பூங்கா அதிகாரிகள் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு வார்தா புயலால் பலத்த சேதம் அடைந்த பூங்காவை சீரமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

காணும் பொங்கலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் பூங்காவை அதற்குள் முழுமையாக சீரமைக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து வண்டலுர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வார்தா புயலால் வண்டலுர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. அவை வெட்டப்பட்டு பூங்காவுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவில் இருந்து வெளியே இன்னும் கொண்டு செல்லப்படவில்லை. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாத நிலையில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு வண்டலுர் பூங்கா திறக்கப்படவில்லை. சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் 10 நாட்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணா கால்வாயில் திறந்துவிட தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. குறைந்த அளவே உள்ளது. தண்ணீர் எவ்வளவு உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். மக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
பண பரிவர்த்தனை 35 சதவீதம் வரை டிஜிட்டல் மயமாகி உள்ளது. இது ஓரிரு மாதங்களில் 50-ல் இருந்து 60 சதவீதம் உயரும். பணமில்லா பரிவர்த்தனையை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்.
ஆந்திராவில் கைரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. தற்போது ‘ஸ்மார்ட்’ செல்போன்களில் பண பரிவர்த்தனைகள் செய்யலாம். இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம், காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (25). கிளீனர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவாசி சாலையில் சென்றார்.
கலெக்டர் அலுவலகம் அருகே வேதாச்சலம் நகரை கடந்த போது சாலையின் குறுக்கே மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
இதில் நிலைதடுமாறிய அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் வீரமணி (52). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை புழல் லட்சுமிபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டின் 2-வது மாடியில் நின்று கட்டிட பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வீரமணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் கைப் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது. அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
சுற்றுலா விசாவில் கிருஷ்ணகுமார் இலங்கை செல்ல இருந்தது தெரிய வந்தது. அவருக்கு அமெரிக்க டாலர் கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் இருந்து தாம்பரத்திற்கு இன்று காலை முட்டை லோடு ஏற்றிய மினி லாரி சென்றது. வேலூரை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி வண்டியை ஓட்டினார்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி திடீரென தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த முட்டை அட்டைகள் முழுவதும் சரிந்தது. சுமார் 37 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பரங்கிமலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முட்டைகள் முழுவதும் உடைந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இந்த விபத்தால் கிண்டி-தாம்பரம் இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருபவர் எழில்மாறன். இவர் தனது காரை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்தார்.
நேற்று மாலை அவர் காரை ஆஸ்பத்திரியிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவர் கார் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 25). ஆட்டோ டிரைவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் துரைராஜு டன் (37) கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கபட்டினத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆட்டோவில் சென்றார்.
பின்னர் அவர்கள் இருவரும் சென்னை நோக்கி ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த வேன் திடீரென ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் முன் பகுதி நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டில்லிபாபும், துரைராஜும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுசெங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிபாபுவும், துரைராஜும் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ‘வார்தா’ புயலால் பலத்த சேதம் அடைந்தது. பூங்காவில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து, விலங்குகள் இருப்பிடம் மற்றும் பார்வையாளர்கள் செல்லும் பகுதியில் விழுந்து விட்டன.
பூங்காவை தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு விழுந்த மரங்களை விரைவாக அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் பூங்காவை சீரமைக்க தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன் பிறகு மரங்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்ற பயிற்சி பெற்ற நபர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் கட்டமாக பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பகுதியில் விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அதன் பின்னர் தமிழகம் வந்த மத்திய குழுவினர், பூங்காவை நேரில் ஆய்வு செய்தனர். அவர்களிடம் பூங்கா அதிகாரிகள், பூங்காவை சீரமைக்க ரூ.24 கோடி தேவைப்படுகிறது என்று கோரிக்கை மனு அளித்தனர். மத்திய குழுவினர் வந்து சென்ற பிறகு பூங்காவை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.
பூங்காவில் விழுந்து கிடந்த தைலம் மரங்களை மட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தினர் வெட்டி எடுத்துச்சென்றனர். மீதம் உள்ள மரங்கள் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வெட்டப்பட்ட மரத்துண்டுகள் பூங்காவின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
மரம் விழுந்து பாதிப்பு அடைந்த விலங்குகள் இருப்பிடங்களை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. பார்வையாளர்கள் பூங்காவை சுற்றி பார்க்க வைத்திருந்த சைக்கிள்கள் புயலால் சேதம் அடைந்தன. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் வெட்டப்பட்ட மரக்கழிவுகள் பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலை ஓரம் மற்றும் விலங்குகள் இருப்பிடங்கள் அருகில் புதர்கள் போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனையும் பூங்கா அதிகாரிகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தீ விபத்து ஏற்பட்டால் பூங்கா முழுவதும் தீ பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்கள் பார்வையிட பூங்கா திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இது குறித்து பூங்கா அதிகாரி கூறியதாவது:-
‘வார்தா’ புயலில் வண்டலூர் பூங்கா பலத்த சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவுக்கு வருடந்தோறும் 3 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள். ஆகையால் பூங்காவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறக்க பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள், பூங்காவை சுற்றிப்பார்த்தனர். அப்போது வெட்டப்பட்ட மரங்களின் கழிவுகள் பூங்காவில் பல்வேறு பகுதியில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் பூங்காவை பார்வையாளர்கள் பார்க்க திறந்தால் ஆபத்து ஏற்படும். யாராவது விளையாட்டுக்கு மரக்கழிவுகளில் தீ வைத்துவிட்டால் பயங்கர தீ விபத்து ஏற்படும். அப்போது 1,480 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா முழுவதும் தீ பரவும், தீயை அணைப்பதற்கு போதிய தீயணைப்பு வாகனங்கள் நம்மிடம் கிடையாது.
இதனால் பூங்காவில் உள்ள மரக்கழிவுகளை முழுமையாக அகற்றிவிட்டு பூங்காவை திறக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் திட்டவட்டமாக பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு பூங்கா அதிகாரி கூறினார்.
இந்த நிலையில் பூங்காவை பார்க்க தினமும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் பூங்காவை பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
இதையடுத்து பூங்கா சார்பில், நுழைவு வாயில் பகுதியில் ஒரு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், ‘வார்தா’ புயல் சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பூங்காவின் உள்ளே பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதப்பட்டு உள்ளது.






