என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திப்பாரா பாலத்தில் லாரி கவிழ்ந்து 37 ஆயிரம் முட்டை உடைந்தது
    X

    கத்திப்பாரா பாலத்தில் லாரி கவிழ்ந்து 37 ஆயிரம் முட்டை உடைந்தது

    கத்திப்பாரா பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன.
    ஆலந்தூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் இருந்து தாம்பரத்திற்கு இன்று காலை முட்டை லோடு ஏற்றிய மினி லாரி சென்றது. வேலூரை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி வண்டியை ஓட்டினார்.

    கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி திடீரென தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த முட்டை அட்டைகள் முழுவதும் சரிந்தது. சுமார் 37 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பரங்கிமலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    முட்டைகள் முழுவதும் உடைந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இந்த விபத்தால் கிண்டி-தாம்பரம் இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×