என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருவதால் அவர் பயணம் செய்ய உள்ள இடங்கள், பாதைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (வியாழக்கிழமை) இரவு தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



    விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும் ஜனாதிபதி, குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை சென்று இரவு தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையில் இருந்து காரில் தாம்பரம் விமான படை தளத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அடையாறில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து பழைய விமான நிலையம் சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இதையொட்டி நேற்று சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்ய உள்ள இடங்கள், பாதைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை, அங்கிருந்து தாம்பரம் விமானப்படை தளம், அங்கிருந்து அடையாறு, அங்கிருந்து மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு என ஜனாதிபதியின் மாதிரி கார் ஒன்றை ஓட்டிச்சென்று அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.


    விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 106 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்.

    நேற்று மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார்.

    டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 27-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம். சில மத்திய மந்திரிகளையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடப்பதற்கு உரிய அனுமதி வழங்க உதவியதற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.


    வறட்சி நிவாரண நிதி, வார்தா புயல் நிவாரண நிதி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய கோரி உள்ளோம்.

    மேலும் நீட் தேர்வு, அத்திகடவு- அவினாசி திட்டம், காவிரி பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை போன்றவை பற்றியும், கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 3, 4-வது அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளோம்.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆலோசனை இன்றியும், மாநில அரசின் ஒப்புதலின்றியும் செயல்படுத்த கூடாது என்று பிரதமரிடம் கோரினோம்.


    பிரதமர் மோடி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு பரிசீலித்து உரிய ஆவண செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார். அப்போது அவரிடம் நிருபர்கள், ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்துக்கு எதிராக நடக்கும் நெடுவாசல் போராட்டம் குறித்து கேள்வி கேட்டனர்.

    அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தமிழக அரசு, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஏற்காது” என்றார்.

    ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் ராணுவ விருது வழங்கும் விழா வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லியில் இருந்து 60 சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக மக்களுடன் இணைந்து காங்கிரஸ் போராடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    புதுக்கோட்டை நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பாக நானும், காங்கிரஸ கட்சி சட்டமன்ற தலைவர் ராமசாமியும் அந்த பகுதி மக்களை சந்தித்து பேச உள்ளோம். தேவைப்பட்டால் மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தும்.


    வருகிற 1-ந்தேதி அந்த பகுதி மக்கள் ‘பந்த்’ போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும். இந்த பந்த் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வியாபார மக்கள், மற்றும் பல அமைப்புகள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன் என்பதாலும் எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதாக உணர்கிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடையில் முறையாக அரிசி, பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏழை,. எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இல்லை எனில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் அலுவலகங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.


    தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும் என்று சில பா.ஜ.க. தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்துவதாக பத்திரிகையில் செய்திகள் வெளி வந்துள்ளன. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விதி விலக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1985-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 முறை பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தற்போது பூங்காவை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது. 2 மாதத்துக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த மாதம் 10-ந்தேதி திறக்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது வரை) ரூ.20 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும்.

    புகைப்படக்கருவிக்கு (கேமரா, செல்போன் உள்ளிட்டவை,) ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, பூங்காவை பேட்டரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, சிங்க உலாவிடம் வாகன கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    நுழைவுக்கட்டணம் வாங்காமல் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஆலப்பாக்கம் குட்டையில் தண்ணீர் அதிகம் இருப்பதால் பொதுமக்களை அச்சுறுத்தும் 3 பெரிய முதலைகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    தாம்பரம்:

    பீர்க்கன்கரணையை அடுத்த ஆலப்பாக்கத்தில் சிறிய தண்ணீர் குட்டை உள்ளது. இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த வாரம் குட்டையின் கரையோரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள முதலைகள் இருந்தது. பொது மக்கள் நடமாட்டத்தை கண்டதும் மீண்டும் அந்த முதலைகள் குட்டைக்குள் சென்று விட்டன.

    குட்டையில் முதலைகள் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குட்டையில் மீன் பிடிக்கவும், பொதுமக்கள் துணி துவைக்கவும் சென்று வந்தனர். முதலை பீதியால் தற்போது பொது மக்கள் அந்த குட்டைக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

    குட்டையில் சுமார் 5 அடி நீளமுள்ள 3 முதலைகள் கிடப்பதாக தெரிகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த முதலைகளை வனத்துறையினரும், வண்டலூர் பூங்கா அதிகாரிகளும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து தாம்பரம் வனத்துறையினரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஆலப்பாக்கம் குட்டையில் முதலைகள் கிடப்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் முதலைகளை பிடிப்பதில் கஷ்டம்.

    மேலும் குட்டையை சுற்றி அதிகளவு புதர்கள் உள்ளன. எனவே வலைவீசி முதலைகளை பிடிக்க முடியாது. குட்டையில் ஓரளவு தண்ணீர் வற்றியதும் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    வண்டலூர் பூங்காவையொட்டி ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், சாதனந்தபுரம் பகுதிகள் உள்ளது. இங்குள்ள ஏரிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலைகள் சிக்கி இருக்கிறது.

    பூங்காவில் பராமரிக்கப்படும் முதலை குட்டிகளை சில நேரங்களில் பறவைகள் இரைக்காக தூக்கிச் செல்வது வழக்கம். அவ்வாறு தூக்கிச் செல்லப்படும் முதலை குட்டிகள் சில நேரங்களில் தப்பி அருகில் உள்ள நீர் நிலைகளில் விழுந்து விடுகின்றன. அவையே தற்போது பெரிய அளவில் வளர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

    முதலை குட்டிகளை பறவைகள் தூக்கிச் செல்வதை தடுக்க வண்டலூர் பூங்காவில் குட்டைகளை சுற்றி வலைகள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று காலை டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளமாட்டார். அவர் வழியில் தற்போது நடக்கும் ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர மாட்டோம்.


    ஹைட்ரோ ஹார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்போம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மக்களுக்கு துணை நிற்போம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திகும் போது தமிழகத்துக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பனி மூட்டம் காரணமாக பெங்களூர் சென்ற 2 விமானம் சென்னை திரும்பியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று அதிகாலை 5.10 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. பெங்களூரில் அதிகமான பனி மூட்டத்தால் மோசமான வானிலை காணப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தை சென்னை திரும்பி செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் அந்த விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதைப்போல லண்டனில் இருந்து பெங்களூர் சென்ற பயணிகள் விமானமும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    பெங்களூரில் வானிலை சீரடைந்ததும் மீண்டும் அந்த விமானங்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றன.
    நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு காஞ்சீபுரம் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பல்வேறு  அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி  உள்ளது.  காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    பஸ் மீது மோதியதால் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து வாலிபர் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நாடார் சங்க கட்டிடம் அருகே இன்று காலை 6 மணிக்கு புதுவை அரசு பஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.

    அப்போது எதிரே 4 வாலிபர்கள் ரேஸ் பைக்கில் வேகமாக வந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வருவதை பார்த்த டிரைவர் விநாயக மூர்த்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பைக் பஸ்சின் முன்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கிய அந்த பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சிலும் தீப்பிடித்தது.

    பின்னால் வந்த மற்ற பைக்குகளும் மோதி வாலிபர்கள் கீழே விழுந்தனர். தீபிடித்த பைக்கை ஓட்டி வந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் (வயது 28) என்பவர் உடல் கருகினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மற்ற வாலிபர்கள் படுகாயம் அடைந்து ரோட்டில் கிடந்தனர். பஸ்சின் முன் பகுதி தீப்பிடித்து எரிவதை கண்டதும் பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ், மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த டியோட்டர் உள்பட 3 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயம் அடைந்தவர்களில் மாரி என்பவர் பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த போது விபத்தில் சிக்கியதும் தெரிகிறது. பைக் ரேசில் வேகமாக வந்த போது பஸ்சில் மோதி விபத்து நடந்துள்ளது.

    இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பலியான விஜய் ஸ்ரீ ரக்‌ஷன் சென்னை தரமணியில் உள்ள ஒரு கால் சென்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுகிறார்கள். போலீசார் கடுமையாக எச்சரித்தும், தீவிரமாக கண்காணித்தும் அதையும் மீறி அவர்கள் பந்தயத்தில் ஈடுபடுகிறார்கள்.

    இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பைக் ரேசில் ஈடுபடுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சீபுரத்தில் உள்ள ரவுடி ஸ்ரீதரின் ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவன் மீது கொலை, ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    இதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு, காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சென்னை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த ஸ்ரீதர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு தப்பி சென்று விட்டான்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்த அவரது மனைவி குமாரியிடம் சென்னை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.

    பின்னர் குமாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட சொத்துக்களை தங்கள் வசம் கொண்டு வரும் பணியில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று மதியம் சென்னை அமலாக்கப்பிரிவு துணை ஆணையர் ஆனந்தி தலைமையிலான அதிகாரிகள், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே எல்லப்பன் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதரின் வீட்டுக்கு சென்றனர்.

    அவர்கள் அந்த வீட்டை பறிமுதல் செய்வதாக தெரிவித்து வீட்டு முன்பு அதற்கான விளம்பர பலகை மற்றும் நோட்டீசு ஒட்டினர்.

    அப்போது வீட்டிற்குள் ஸ்ரீதரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் வீட்டை காலி செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஸ்ரீதரின் வீடு 3 ஆயிரம் சதுர அடி கொண்டது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையால் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
    ஒரே நாளில் வெறிநாய் கடித்து 52 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தபடி பொது மக்களை சுற்றிசுற்றி வந்தது. பஸ் நிலையத்தில் நிற்பவர்களை துரத்தி கடித்தது. நேற்று காலை செங்கல்பட்டு டவுன் மேட்டு தெருவை சேர்ந்த லோகநாதன் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரை வெறிநாய் கடித்தது.

    மேலும் சக்கரபாணி என்பவரையும், கல்லூரி மாணவி ரம்யா, பள்ளிக்கு சென்ற 5 வயது சிறுமி ராஜேஸ்வரி ஆகியோரையும் கடித்தது. அப்பகுதியிலேயே சுற்றிய அந்த நாய் பலரையும் பதம் பார்த்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 52 பேரை கடித்து குதறியது நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆண்கள் 7 பெண்கள், 2 குழந்தைகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
    ×