என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனி மூட்டத்தால் மோசமான வானிலை: பெங்களூர் சென்ற 2 விமானம் சென்னை திரும்பியது
    X

    பனி மூட்டத்தால் மோசமான வானிலை: பெங்களூர் சென்ற 2 விமானம் சென்னை திரும்பியது

    பனி மூட்டம் காரணமாக பெங்களூர் சென்ற 2 விமானம் சென்னை திரும்பியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று அதிகாலை 5.10 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. பெங்களூரில் அதிகமான பனி மூட்டத்தால் மோசமான வானிலை காணப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தை சென்னை திரும்பி செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் அந்த விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதைப்போல லண்டனில் இருந்து பெங்களூர் சென்ற பயணிகள் விமானமும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    பெங்களூரில் வானிலை சீரடைந்ததும் மீண்டும் அந்த விமானங்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றன.
    Next Story
    ×