search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் கதவை உடைத்து நகை,  1 லட்சம் பணம் திருடிய 2 பேர் கைது
    X

    நகை திருடி கைதானவர்கள்

    வீட்டின் கதவை உடைத்து நகை, 1 லட்சம் பணம் திருடிய 2 பேர் கைது

    • வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • இருவரிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜாங்கம் (வயது 56).இவர் தனது மனைவி சந்திரா, மகன் ரமேஷ், மருமகள் விஜயலட்சுமி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் 7-ம் தேதி காரைக்கால் சென்றுள்ளனர். 8-ம் தேதி மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாங்கம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசில் புகார் ராஜாங்கம் அளித்தனர். இதன்பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மாவட்டம் மதகடி தாமஸ்பிள்ளை அறிவுதிடல் பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் ஐயப்பன் (வயது 36), பொறையார் அனந்தமங்கலம் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அருள்குமார் (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சேர்ந்து வீட்டில் கதவை உடைத்து 4 பவுன் நகை ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் கைது செய்து அவர்களிடமிருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    Next Story
    ×