என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காஞ்சிபுரம் அருகே 2 வீடுகளில் நகை கொள்ளை
  X

  காஞ்சிபுரம் அருகே 2 வீடுகளில் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரத்தை அருகே செவிலிமேடு குமரகோட்டம் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 6½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

  இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டறை விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகன் (34). இவரது மனைவி மோனிஷா. இவர்கள் இருவரும் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.

  முருகன் மற்றும் அவரது மனைவி மோனிஷா இருவரும் வேலை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பீரோவை திறக்க சென்ற முருகன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் மாடிப்படிக்கான கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து, போர்டிகோ வழியாக சென்று படியில் இருந்த மெயின்டோர் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

  பீரோவை உடைத்து 5½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  இதுகுறித்து முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×