என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை? போலீசார் விசாரணை
  X
  கோப்பு படம்

  திண்டுக்கல் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை? போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியாக வசித்து வந்த மூதாட்டி இன்று காலை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள நாகையகோட்டை சென்டுவழி நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி பாப்பம்மாள்(65). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த பல வருடங்களாக பாப்பம்மாள் இதேபகுதியில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  நீண்டநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்றுபார்த்தனர். உடலில் எந்தவித காயங்களும் இல்லாமல் பாப்பம்மாள் இறந்துகிடந்தார்.

  ஆனால் அவர் அணிந்திருந்த 3½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. யாரேனும் மர்மகும்பல் மூதாட்டியை கொன்றுவிட்டு அவரது நகையை கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது பாப்பம்மாள் இறந்ததை பார்த்து அவர் அணிந்திருந்ததை நகைகளை கழற்றி சென்றார்களா? என்று சந்தேகம் எழுந்தது.

  அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×