search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டப்படி  கிடைக்க வேண்டிய பாசன நீரை வழங்க வேண்டும் -வெள்ளகோவில் விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    சட்டப்படி கிடைக்க வேண்டிய பாசன நீரை வழங்க வேண்டும் -வெள்ளகோவில் விவசாயிகள் வலியுறுத்தல்

    • முறைகேடான நீா் மேலாண்மையால் கால்வாய் விவசாயிகளின் வாழ் வாதாரம் சீரழிந்து விட்டது.
    • பாசன நீரை வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் பி.ஏ.பி., கிளைக்கால்வாயில் சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய பாசன நீரை வழங்க வேண்டுமென அரசுக்கு விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டருக்கு பிஏபி., வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய் நீா் பாதுகாப்புச் சங்கத் தலைவா் வேலுசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பரம்பிக்குளம் - ஆழியாறு நிா்வாகத்தின் 20 வருட முறைகேடான நீா் மேலாண்மையால் வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிந்து விட்டது.

    சட்டப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீா் பிற பகுதிகளில் திருடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள், நீதி மன்ற வழக்குகள், கோவை, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் ஏமாற்றமே பதிலாக கிடைக் கிறது. கோரிக்கைகள் குறித்து 10 நாட்களில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் கண்டு கொள்ளப்படவில்லை.

    கடந்த பல மாதங்களாக கால்வாய்களில் செத்த கோழிகள், குப்பை கொட்டப்பட்டு நீரில் மிதந்து வருகின்றன. புகாா் தெரிவித்தும் மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளாததால் அசுத்தங்களை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, வெள்ளக்கோவில் பிஏபி. கிளைக் கால்வாயில் சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய பாசன நீரை வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×