search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே ரூ.10.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம்- அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு
    X

    அறிவுசார் மைய கட்டிட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே ரூ.10.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம்- அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு

    • காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை உணவு மற்றும் உணவு ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது,

    மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவத ற்காக போட்டித்தேர்வுகளு க்கான அறிவுசார் மையம் காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, மத்திய மற்றும் மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க ப்படவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. இந்த பயிற்சி கட்டுமான பணிகள் விரைந்து முடித்து பயன்பா ட்டிற்கு கொண்டுவரப்படும். மாணவ- மாணவிகள் விடா முயற்சி, தன்னம்பி க்கை மற்றும் குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவ- மாணவிகள் செல்போன்களை படிப்பி ற்காக மட்டும் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் அமுதா, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×