search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் நகராட்சி குப்பை கிடங்கை  மாவட்ட கலெக்டர் ஆய்வு
    X

    குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்த காட்சி.

    காரைக்கால் நகராட்சி குப்பை கிடங்கை மாவட்ட கலெக்டர் ஆய்வு

    • காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை ஆய்வு செய்தார். குப்பையை பிரித்து எடுக்கும் (பயோ மைனிங்) பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், எச் .ஆர் .ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் வீடு தோறும் எடுக்கப்பட்டு வரும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் இயந்தி ரத்தை நிறுவு வதற்கான பணிகளையும் பார்வையிட்டார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த கிடங்கு மற்றும் பணியில் வேலை செய்யும் மகளிர் மற்றும் பிறருக்கு கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். அவை இல்லாமல் பணி செய்ய க்கூடாது என கலெக்டர் குலோத்துங்கன் அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×