search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி கோவிலில் ஆன்மீக பயிற்சி வகுப்பு தொடக்கம்
    X

    கோவிலில் ஆன்மீக பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    திருத்துறைப்பூண்டி கோவிலில் ஆன்மீக பயிற்சி வகுப்பு தொடக்கம்

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
    • செயல் அலுவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரிபவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஆன்மீக பயிற்சி வகுப்பு மற்றும் தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொழில்நுட்ப கல்வித்துறையில் பணிபுரியும் அன்பு பாரதம் போட்டி தேர்வு பயிற்சி மைய நிறுவனர் குட்டியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பயிற்சியாளர் வீர பைரவன் (ஆய்மூர் வி.ஏ. ஓ), பயிற்சியாளர் ஸ்ரீனிவாசன், வக்கீல் நாகராஜன், சர்வாலய அருட்பணி மற்றும் அறப்பணி குழுவை சேர்ந்த ஜெய்பிரகாஷ், முருகன், அரசு வக்கீல் பாஸ்கர் மற்றும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் அன்பு பாரதம் போட்டி தேர்விற்கான பயிற்சி மையத்தின் ஒத்துழைப்போடு கோவில் நிர்வாகத்துடன் இணைந்து கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் பயிற்சி நடத்த உள்ளது. இதன் மூலம் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவர்.

    இந்த பயிற்சியை போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களும், பொதுமக்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவில் செயல் அலுவலர் முருகையன் கேட்டுக்கொண்டார். முடிவில் அரசு வக்கீல் பாஸ்கர் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் செய்திருந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள கோவில் செயல் அலு வலர் தேர்வி ற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரி பவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

    Next Story
    ×