search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஞ்ஞானிகள் தரும் தகவல்களை  விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரி அறிவுரை
    X

    சோமனஅள்ளி கிராமத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா நடந்த காட்சி.

    விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரி அறிவுரை

    • தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழாநடந்தது.
    • விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சோமனஅள்ளி கிராமத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழாநடந்தது.

    வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். கோயமுத்தூர் வேளாண் விரிவாக்க கல்வி இயக்கக தலைவர் பேராசிரியர் ஆனந்தராஜா வயல் தின விழாவில் விளக்க உரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் ஜீவஜோதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் மா, தக்காளி, குளிர் பிரதேச காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஏற்றுமதியும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் கோவை, பெரியகுளம், திருச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டுமே தோட்டக்கலை கல்லூரி இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை கல்லூரி தொடங்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

    அந்த அடிப்படையில் தற்போது ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் அனைத்து ஆய்வக வசதிகளுடனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றால் தான் விவசாயம் சிறப்படையும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலானதாக உள்ளது.

    ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் படித்த விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிர்களை தாக்கும் பூச்சிகள் விவசாயிகளின் கண்ணுக்கு தெரிந்த எதிரிகள்.

    அது மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறைந்திருக்கும் புழுக்கள் பயிர்களை தாக்கி அழிக்கின்றன. இவற்றை மேலாண்மை செய்ய விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வேளாண் விஞ்ஞானி ஜீவஜோதி பேசினார்.

    Next Story
    ×