என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

    • தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறை யாமல் நீடித்து வருகிறது.

    தருமபுரி,

    கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு அதிக அளவு திறக்கப்பட்டது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.

    நேற்று மாலை 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறையாமல் நீடித்து வருகிறது.

    Next Story
    ×