என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும்
- சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும்
குனியமுத்தூர் :
மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டிட பொருட்கள் விலை உயர்வை எதிர்த்தும், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்தும், கோவை மேட்டுப்பாளையம் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும், சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும் என்றார். இதில் கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ, கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நூர் பாத்திமா, கோவை மாநகர மாவட்டத் தலைவர் வடக்கு மண்டலம் பி.கே.அந்தோணிசாமி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் ராபின், கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






