search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சுதந்திர தின விழா-கலெக்டர் சமீரன் கொடியேற்றினார்
    X

    கோவையில் சுதந்திர தின விழா-கலெக்டர் சமீரன் கொடியேற்றினார்

    • நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 66 பேருக்கு சான்றிதழை வழங்கினார்.

    கோவை

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வண்ண பலூன்களையும் அவர் பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 66 பேருக்கு சான்றிதழை வழங்கினார். இதேபோல் அரசு டாக்டர்கள், சுகாதா–ரத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

    பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட விளையாட்டு துறை, தென்னை ஆராய்ச்சி மையம், கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மாவட்ட ஆலோசனை மையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய 176 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக சேவை செய்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சவுரிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட முன்மாதிரி கிராம விருது கேடயம் மற்றும் ரூ. 7.5 லட்சம் பரிசு தொகையை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் பெற்றது. முன்னதாக, கொரோனா நோய் தொற்று காரணமாக சுதந்திர தின விழாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை போலீஸ் கமிஷனர்கள், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு, துணை கமிஷனர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வீடுகளுக்கு சென்று சான்றிதழ் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், கோவை மாநகராட்சி வளாகத்தில் மேயர் கல்பனா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.சுதந்தி தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×