search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மகளிர் சமுதாய கழிப்பிடக் கட்டிடம் திறப்பு விழா
    X

    தஞ்சையில் மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார். 

    மகளிர் சமுதாய கழிப்பிடக் கட்டிடம் திறப்பு விழா

    • தஞ்சை மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.‌
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டு கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் 15-வது நிதி குழு மானிய நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.

    இது தவிர ரூ.5 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று மகளிர் சமுதாய கழிப்பிடக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலை வகித்தார்.மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த வார்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் .

    இந்த பகுதி சௌராஷ்டிரா மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் கோரிக்கையான பெயர் பலகையை தமிழ் மற்றும் சௌராஷ்டிரா மொழியில் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதனை ஒப்புதலுக்காக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒப்புதல் வந்த பிறகு கண்டிப்பாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ரம்யா, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×