என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வளர் தமிழ் மன்ற தொடக்க விழா
    X

    வளர்தமிழ் மன்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வளர் தமிழ் மன்ற தொடக்க விழா

    • நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக வளர் தமிழ் மன்ற தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது.
    • வளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் குறித்து தமிழ்த்துறை தலைவர் நிர்மலா உரையாற்றினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக வளர் தமிழ் மன்ற தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. இளநிலை 3-ம் ஆண்டு கணிதத்துறை மாணவி தில்லை அருந்ததி வரவேற்றார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தலைமை தாங்கினார்.முதல்வர் மேஜர் து.ராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார் வாழ்த்தி பேசினார். வளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் குறித்து தமிழ்த்துறை தலைவர் நிர்மலா உரையாற்றினார். விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ச.ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார். இளநிலை 2-ம் ஆண்டு தாவரவியல் துறை மாணவி மி.லிபியா ஆண்ரூஸ் மேரி நன்றி கூறினார்.

    Next Story
    ×