என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நடுக்கடலில் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை
  X

  நடுக்கடலில் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள்.
  • துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க, ராஜ்குமார் விசைப்படகில் சென்றனர்.

  புதுச்சேரி:

  காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், ராஜ்குமார் தலைமையில், வழக்கம் போல், கடந்த 2-ந்தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க, ராஜ்குமார் விசைப்படகில் சென்றனர்.

  கோடியக்கரை அருகே நடுகடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென வந்த இலங்கை கடற்படையினர். பிடித்த மீன்களில் பெரிய மீன்களை தரும்படி மிரட்டினர். அதற்கு மீனவர்கள் மீன் இல்லை என கூறிய தால், தங்களது ரோந்துப்படகிலி ருந்து, 3-க்கு மேற்பட்ட கடற்படையினர், மீனவர் களின் விசைப்பட கிற்கு சென்று, மீனவர்களை தாங்கள் வைத்திருந்த கம்பு மற்றும் கயிற்றால் அடித்து, உதைத்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான மீன், அரிசி, மளிகை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்தனர்.

  பின்னர் இந்த பகுதி யை விட்டு உடனே செல்ல வேண்டும். இல்லை யென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்துவிடுவோம் என மிரட்டி சென்றனர். காயம் அடைந்த மீனவர்கள், நேற்று மாலை காரைக்கால் திரும்பி, காரைக்கால் அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் உதவி பெற்று சென்றனர். அதிகம் காடையம் அடைந்த ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்ல பட்டுள்ளார்.

  Next Story
  ×