search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாணவர்களுக்கான தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறை- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்முறை பயிற்சி முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

    தஞ்சையில், மாணவர்களுக்கான தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • குழந்தைகள் ரெயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
    • பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியரகம் தற்போது தஞ்சையின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகமாக கடந்த 14.01.2023 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மகால் நூலக காட்சியரை, உலோக, கற்சிற்ப காட்சியரை, பொது நிர்வாக காட்சியரை, நடந்தாய் வாழி காவிரி, விவசாய காட்சியரை, சோழர் ஓவிய காட்சியரை, கைத்தறி காட்சியரை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், இசைக்கருவிகள், நிகழ்த்துக்கலை காட்சியரை என மொத்தம் 12 காட்சி அறைகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் அமைந்துள்ள 7டி திரை அரங்கம் மற்றும் பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. எண்ணற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை கண்டு களித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருங்காட்சி யகத்தில் கடந்த 25.01.23 முதல் 29.01.23 வரை தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு கலை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகளை மேலும் கவரும் வண்ணம் 14.04.2023 முதல் குழந்தைகள் ரயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாணவர்க ளுக்கான கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) உதவி ஆணையர் (கலால்) பழனிவேல், சுற்றுலா அலுவலர் நெல்சன், தாசில்தார் சக்திவேல், பிரபு, கலைச்செல்வி பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×