search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்- 176 பேர் கைது
    X

    மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

    தஞ்சையில், இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்- 176 பேர் கைது

    • மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீவல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், மின்கட்டணம், சொத்து வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமை தாங்கினார். தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், பாலசுந்தரம், பக்கிரிசாமி, வீரமோகன், விஜயலட்சுமி, வாசு.இளையராஜா, கருப்பையா, பூபேஷ்குப்தா, எஸ்தர்செயலீமா, பால்ராஜ், விஜயன், அன்பழகன், ஜார்ஜ்துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் கோஷமிட்டப்படியே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 176 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×