search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில் சுங்க சாவடி கட்டண உயர்வை ஏற்க முடியாதுபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
    X

    தமிழ்நாட்டில் சுங்க சாவடி கட்டண உயர்வை ஏற்க முடியாதுபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

    • பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார்
    • விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது துகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை, நெய்வேலியில் நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நீர்நிலைகள் மாசுபட்டு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கடலூர் மாவட்ட கலெக்டர், விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கு ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார் மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார் சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததுபடி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும் இதுவரை எடுக்கப்படவில்லை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு வருங்காலத்தில் 15000 மெகாவாட் உற்பத்தியில் செய்யப் போவதாக அறிவித்துள்ளது,

    இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதுற்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்குஅறிக்கை அளித்துள்ளேன் விரைவில் நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது, மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் எனவும் விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையால் தான் அதிகமாக குற்றங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×