என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில், ஷோரூமில் நிறுத்தியிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது
- தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்று சாலையில் போட்டனர்.
- இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஷோரூமில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தானாக எரிய தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சடைந்த பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு தீ விபத்துக்கு உள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை ஸ்டோர் ரூமில் இருந்து இழுத்துச் சென்று சாலையில் போட்டனர்.
தொடர்ந்து மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிய தொடங்கியது இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தார்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.
இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றிலும் நாசமானது இச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story