search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே மாதத்தில் 2 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா பாதிப்பு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே மாதத்தில் 2 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா பாதிப்பு

    • 688 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதார, மருத்துவ துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    2 ஆயிரத்து 127 பேர்

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சேலம் மாவட்டத்தில் 33 ஆகவும் நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆகவும் இருந்தது. பின்பு பாதிப்பு அதிகரித்து வந்தது. ஜூலை 15-ந்தேதி தினசரி பாதிப்பு சேலத்தில் 83 ஆகவும், நாமக்கல்லில் 21 ஆகவும் அதிகரித்தது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமான நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை சேலத்தில் 65 ஆகவும், நாமக்கல்லில் 34 ஆகவும் இருந்தது.

    ஜூலை மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 1328 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 799 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். கொரோனா பாதிப்பினால் யாரும் இறக்கவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது.

    688 பேருக்கு சிகிச்சை

    சேலம் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 1 லட்சத்து 27 ஆயிரத்து 235 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 479 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவால் 1762 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 68 ஆயிரத்து 897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 68 ஆயிரத்து 154 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 209 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவால் 534 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது 688 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவ தால் சுகாதார, மருத்துவ துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×