search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தயார் நிலையில் ஆண்டிபாளையம்  கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
    X

    தயார் நிலையில் ஆண்டிபாளையம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

    • வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.
    • 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் நகரின் மையப்பகுதிகள் மட்டும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ல் தொடங்கிய இத்திட்டம் 2009ல் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் இதற்கான சுத்திகரிப்பு மையம் எஸ்.பெரியபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    இத்திட்டத்தில் ஏறத்தாழ 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்ரூத் திட்டத்தில், மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.இதற்காக ஆண்டிபாளையம் மற்றும் எஸ்.பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் மேலும் இரு சுத்திகரிப்பு மையம் அமைக்கும் வகையில் பணி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவற்றின் மூலம் 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தில் ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கப்படவுள்ளது.அவ்வகையில் இதற்கான குழாய்கள் பதிப்பு பணி மாநகராட்சி பகுதியில் பெருமளவு நிறைவடைந்துள்ளது.இத்திட்டத்தில் ஆண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இயக்கத்துக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது இந்த வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.

    Next Story
    ×