என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்தூரில் ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூவேதி திருக்கல்யாணம்
  X

  மத்தூரில் நடைபெற்ற ஸ்ரீநிவச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண நிகழ்ச்சியில், மண கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் தெய்வங்கள்.

  மத்தூரில் ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூவேதி திருக்கல்யாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.
  • மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.

  மத்தூர்,

  கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் குருக்களால் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைள் நடைபெற்று வருகின்றன. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையன்று முன்னதாக சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.

  அதனை தொடர்ந்து கப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, விஷ்வக் ஷேண ஆராதனை, புண்யாக வாசம், நவகலச ஸ்தாபண திருமஞ்ன சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் , விஷ்னக் ஷேண ஆராதனை, நாராயண சங்கல்பம், புன்யாக வாசனம், ரக்ஷாபந்தனம், கண் யாதானம், ஹோமம், ஸ்ரீ நாராயண சூக்த, ஷஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம் மாங்கல்ய தாரணம் மஹா பூர்ணா ஹீதி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு மேளதாளங்கள் முழங்க, மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.

  அத்துடன் சுவாமிக்கு மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் குடும்பதிகள் சுபநிகழ்ச்சிகளும், சகல நற்காரியங்களும், செல்வ செழிப்பு பெருகவும், நோயற்ற வாழ்வுடன்நீண்ட ஆயுள் பெருகவும், அதேபோல் திருமணமாகத கன்னி பெண்கள் விரைவில் மாங்கல்ய சுபகாரியங்கள் கூடவும் கோவிந்தா, கோவிந்தா, திருமலை வாசா, நாராயணா என்ற ஆண்மீக சொற்பொழிவு பாடலுடன் மண கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

  காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அறுசுவையுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீநிவா பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சாமிகளின் வீதி உலா, காளைகள், குதிரைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆண்மீக அன்பர்களும், சிவனடியார் குழுக்களும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

  Next Story
  ×