search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கூரில், பேரணியாக சென்று விவசாயிகள் போராட்டம்-பரபரப்பு
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    மதுக்கூரில், பேரணியாக சென்று விவசாயிகள் போராட்டம்-பரபரப்பு

    • கொப்பரை தேங்காய் கிலோ ரூ.250 விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய்களை கைகளில் ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    மதுக்கூர்:

    தேங்காய் ஒன்றிற்கு ரூ.25 மற்றும் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.250 விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரமையா கோவில் முன்பு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பினர் திரண்டனர். இதற்கு நிர்வாகி முத்துராமன் தலைமை தாங்கினார்.

    பின்னர் தென்னை விவசாயிகள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு பல்வேறு வழிகாய சென்று மதுக்கூர் பஸ் நிலையம் சென்றனர்.அங்கு தேங்காய்களை கைகளில் ஏந்தியப்படி உரிய விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் தென்னை விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள், காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் மற்றும் பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தால் மதுக்கூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×